மனித உரிமைகள் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றங்கள் மற்றும் இனங்காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கையின் பிரதிநிதிகளுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு இலங்கை, எகிப்து, பனாமா, பெரு, துர்க்மெனிஸ்தான் மற்றும் சாம்பியா தொடர்பான மனித உரிமை அறிக்கைகளை கருத்திற்கொண்டு தனது 137வது அமர்வு தொடர்பான இறுதி அவதானிப்புகளை முன்வைத்து இதனைக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இலங்கையின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் சில பரிந்துரைகளை வழங்கி இருந்ததாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு குறிப்பிட்டுள்ளது.
இந்த மூன்று அமர்வுகளிலும் சுமார் 183 முறைப்பாடுகள் குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதுடன் அவற்றில் 93 முறைப்பாடுகள் தொடர்பில் குழு தனது கருத்துக்களை சமர்ப்பித்துள்ளது.
17 முறைப்பாடுகள் தொடர்பிலான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள மனித உரிமைகள் குழு, பல நாடுகள் ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளது.