ஹோமாகம – மாபுல்கொட பிரதேசத்தில் நேற்று (25) இரவு வாகன கராஜ் ஒன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மற்றும் முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு சுடப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 துப்பாக்கியைக் கொண்டு இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, இரண்டு வாகனங்களும் சேதமடைந்தன.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.