புதிய முதலீட்டு வலயங்கள் ஸ்தாபிப்பு! – இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள வசதி வாய்ப்பு SamugamMedia

இந்த வருட இறுதிக்குள் இலங்கை முதலீட்டு சபை ஐந்து புதிய முதலீட்டு வலயங்களை ஸ்தாபிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்மூலம் நேரடி வெளிநாட்டு முதலீட்டு நடவடிக்கைகள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மேலதிக வருவாயை அதிக அளவில் ஈட்ட முடியும் என முதலீட்டு சபை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏராளமான வேலைவாய்ப்புக்கள் இலங்கையர்களுக்கு கிடைப்பதற்கான வசதி வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன

.

இந்த ஐந்து புதிய முதலீட்டு வலயங்கள் காங்கேசன்துறை, பரந்தன், கிளிநொச்சி, திருகோணமலை உள்ளிட்ட இடங்களிலும் பியகமவில் இரண்டாம் கட்டமாகவும் ஸ்தாபிக்கப்படவுள்ளன.

இதேவேளை, தற்போது இலங்கை முதலீட்டு சபையின் கட்டுப்பாட்டின் கீழ் நாடளாவிய ரீதியாக 15 முதலீட்டு வலயங்கள் செயல்படுகின்றன.

இந்த வலயங்களினூடாக 300 கோடி அமெரிக்க டொலர்கள் வருடாந்தம் அந்நிய செலாவணியாக பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply