கூட்டத்தில் சாணக்கியன் – பிள்ளையான் – வியாழேந்திரன் கருத்து மோதல் – அரங்கை விட்டு வெயியேறிய வியாழேந்திரன்! samugammedia

கடந்த 30 வருடங்களாக நிலத்தினைப் பாதுகாப்பதற்காகவே தமிழ் மக்கள் போராடிய நிலையில், இன்று அந்த நிலத்திற்கு ஆபத்தான நிலையேற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் காணி சம்பந்தமான தெளிவான தரவுகள் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கவில்லை என்றும் பல காணி கொள்ளைகள் இடம்பெறுவதாகவும் ஆனால் இதற்கு மாவட்ட செயலகம் பொறுப்பு இல்லை என தெரிவிப்பதால் இந்த அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தை நிராகப்பமாக தெரிவித்து இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வெளிநடப்பு செய்திருந்தார்.

இவ்வாறு வெளியேறும் போது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு நன்றி தெரிவித்த இரா.சாணக்கியன் நீங்களும் யோசனை செய்யவேண்டும் அரசாங்கத்தில் இருபதை பற்றி என்று குறிப்பிட்டிருந்தார்.

இதன்போது திரும்பிவந்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அரசாங்கம் பிரச்சனை இல்லை என்றும் மாவட்டம் தான் பிரச்சனையாக உள்தாக குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த இரா.சாணக்கியன் விரைவில் எதிர்கட்சிக்கு வருமாறு குறிப்பிட்டிருந்த நிலையில் அங்கு சிரிப்பொலி எழுப்பட்டிருந்தது.

Leave a Reply