மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் ஏற்பாட்டில் ஏப்ரல் 01ம் திகதி உலக முட்டாள்கள் தினமான இன்று(01) இத்தினத்தில் இன்னமும் சிகரட் புகைக்கும் உங்களில் சிலருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் பல்வேறு விழிப்புணர்வு செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக யாழ் நகரம், ஹட்டன் மற்றும் தலவாக்கலை நகரில் இளைஞர்கள் இணைந்து இன்றைய தினம்(01) வித்தியாசமான முறையில சிகரட் புகைப்பவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.