தென்னிந்திய பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப ஜூனியர் இசை தேர்வில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல பாடகியான உதயசீலன் கில்மிசா கலந்துகொள்ளவுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சிகளில் இடம்பெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் இலங்கையிலிருந்தும் பல்வேறு இளைஞர் யுவதிகள் பங்குபற்றி வருகின்றனர்.
அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா, தர்சன், ஜெனனி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் பிரபல தென்னிந்திய தொலைக்காட்சியான ஜீ தமிழின் சரிகமப ஜூனியர் இசை தேர்விலேயே இலங்கையின் முன்னணி இசைக் குழுக்களில் பாடல்கள் பாடி மக்களின் மனங்களில் இடம்பிடித்த இளம் பாடகியான உதயசீலன் கில்மிசா பங்குபற்றவுள்ளார்.
இந் நிலையில் இந் நிகழ்ச்சியில் திறமைகள் வெளிக்கொணர சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று கில்மிசா தெரிவித்தார்.
இந்நிலையில் ஈழத்துப்பாடகியான உதயசீலன் கில்மிசாவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.