தேசிய தொல்லியல் தின நிகழ்வு யாழில் முன்னெடுப்பு!

இலங்கை தொல்லியல் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டு 133 ஆவது ஆண்டினை முன்னிட்டு தேசிய தொல்லியல் தின நிகழ்வு இன்று யாழ். கோட்டையில் இடம்பெற்றது.

மரபுரிமைசார் விழிப்புணர்வு நடவடிக்கையாக யாழ் பல்கலைக்கழக தொல்லியல்துறை மற்றும் கலாசாரசுற்றுலாத்துறை மாணவர்களுக்கு தொல்லியல் செயற்பாடுகளில் பயன்படுத்தபடும் முறைமைகள் குறித்த பயிற்சிகள் இதன்போது வழங்கப்பட்டன.

இதன்பொழுது மேலாய்வு, மேலாய்வு ஜி.பி.எஸ். முறை, அகழ்வாய்வுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், அகழ்வாய்வு பிரயோகம் ஆகியவற்றை உள்ளடக்கி இப்பயிற்சி நடைபெற்றது.

நேற்று ஆரம்பிக்கப்பட்ட இதன் ஆரம்ப நிகழ்வுகளில் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், யாழ் பல்கலைக்ககழக விஞ்ஞான பீடாதிபதி, தொல்லியல்துறையின் முன்னாள் பணிப்பாளர் நிமால் பெரேரா, பிரதேச தொல்லியல் காரியாலய உதவி பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக இன்றும் இயற்கை விஞ்ஞானம்சார் தொல்லியல், கற்காலம் குறித்த விரிவுரைகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *