யாழின் முக்கிய வீதிக்கு நாளை முதல் பூட்டு..! வெளியான அறிவிப்பு..!samugammedia

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 37 வது பட்டமளிப்பு விழா நாளை(19) முதல் 21ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் 19-  21ம் திகதி வரையான 3தினங்களில் போக்குவரத்து தொடர்பான அசௌகரியங்களை  தவிர்க்கும் பொருட்டு காலை8 மணி தொடக்கம் மாலை 6மணி வரை  திருநெல்வேலி சந்தியிலிருந்து கொக்குவில்  சந்தியை நோக்கிய ஆடியபாதம்  வீதியின் புகையிரதக் கடவை வரையான  பாதை மற்றும் கலட்டிச் சந்தியிலிருந்து இராமநாதன் வீதி பரமேஸ்வராச் சந்தி வரையான பாதை ஆகியன ஒருவழிப்பாதையாகப் பேணப்படுமென, நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் யுகராஜா ஜெலீபன் அறிவித்துள்ளார்.

Leave a Reply