தமிழ்க் கட்சிகளின் கடிதம்; இந்தியா அழுத்தம் விடுத்தால் இராஜதந்திர ரீதியில் ஜனாதிபதி பதிலளிப்பார்! அமைச்சர் அதிரடி samugammedia

தமிழ்க் கட்சிகளின் கடிதம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு, இந்திய அரசாங்கம் அழுத்தம் விடுத்தால், அதற்கு இராஜதந்திர ரீதியான பதிலை ஜனாதிபதி வழங்குவார் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பானது, அரச தகவல் திணைக்களத்தில் இன்று மதியம் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர், 

கத்மண்டு விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவை விமானங்களுக்கான எரிபொருள் விநியோக ஒப்பந்தத்தை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஒப்பந்தம் ஒகஸ்ட் மாதம் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ள நிலையில், விமானங்களுக்கான புதிய எரிபொருள் விநியோகத்தர்களைத் தெரிவு செய்வதற்காக மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச பெறுகை முறையின் கீழ் போட்டி விலைமுறி கோரப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு ஒரேயொரு போட்டி விலைமுறி மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளதை அடுத்து, குறித்த ஒப்பந்தத்தின் விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களைக் கொண்ட குறித்த விலைமனுதாரரான Associated Energy  Group இற்கு, 2 ஆண்டுகளுக்கு இதனை வழங்க துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *