வடக்கில் உள்ள தனியார் வைத்தியசாலைகளின் கழிவுகள் கொழும்புக்கு- பணிப்பாளர் சத்தியமூர்த்தி கருத்து..!samugammedia

வடமாகாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை கழிவுகளை கொழும்புக்கு அனுப்பி எரியூட்டப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அதேவேளை யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்ட கோம்பயன் மணல் மயானத்தில் எரியூட்டியை நிறுவுவதற்கு, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதனை மயானத்தில் எப்பகுதியில் அமைப்பது என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், விரைவில் இடத்தினை அடையாளப்படுத்தி, பணிகளை ஆரம்பிக்க உள்ளோம்.
மேலும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் உள்ள எரியூட்டி திருத்தப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு தான் அரச வைத்தியசாலை மருத்துவ கழிவுகள் எரியூட்டப்படும் என்றும் சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *