வயது முதிர்ந்த பெண்ணை ஏமாற்றி பணம் பறித்த இளைஞன்..!samugammedia

இலத்திரனியல் இயந்திரம் ஊடாக மஸ்கெலியா மக்கள் வங்கியில் நேற்று மாலை பணம் மீள பெற்று கொள்ள சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவர் அங்கு இருந்த இளைஞர் ஒருவரிடம் இலத்திரனியல் அட்டையைக் கொடுத்து 120000/- பணம் மீள பெற்று தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த இளைஞர் முதல் 10000/- பணத்தை மீள பெற்று தான் வைத்து கொண்டு மீண்டும் அந்த முதிய பெண் கூறிய தொகை பணம் 120000/- இயந்திரத்தில் பெற்று கொடுத்துள்ளார்.

அந்த முதிய பெண் சற்று சந்தேகம் அடைந்த நிலையில் பணம் என்னிக் கொண்டு இருந்த வேளையில் சந்தேக நபரான புரவுன்லோ தோட்டத்தை சேர்ந்த மாடசாமி கமலேஸ்வரன் இலத்திரனியல் அட்டையை எடுத்து கொண்டு அவ்விடத்தை விட்டு ஓடி சென்று உள்ளார்.

அதனைத் தொடர்ந்து அக்கம் பக்கம் இருந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அந்த இளைஞனை பிடித்து மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தொடர்ந்து சந்தேக நபரை விசாரணை நடத்தி இன்று காலை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டதாக கூறினார்.

இவ்வாறு பணத்தை மீள பெற்று கொள்ள சென்ற வயது முதிர்ந்த பெண் மஸ்கெலியா லக்கம் தனியார் தோட்டத்தை சேர்ந்த ரட்னம் காமாட்சி என்பவர் என பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *