தமிழ்நாட்டு இயற்கை விவசாய விஞ்ஞானி மூதூர் வருகை..! முக்கிய நிகழ்விலும் பங்கேற்பு..!samugammedia

இயற்கை வழி வேளாண்மையை வலுவூட்டல் தொடர்பாக விவசாயிகளுக்கான பயிற்சிநெறி இன்று வெள்ளிக்கிழமை மூதூர் -சேனையூர் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

இச் செயலமர்வானது ஐந்து நாட்களுக்கு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.
“பசுமையான திருகோணமலை அமைப்பின் ஏற்பாட்டில்”  Deep global அனுசரணையில் இடம்பெறும் இச்செயலமர்வில் நூற்றுக்கும் மேற்பட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இச் செயலமர்வில் வளவாளராக இந்திய தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்த இயற்கை விவசாய விஞ்ஞானி எம்.ரேவதி கலந்து கொண்டு தெளிவூட்டல்களை வழங்கியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *