இலங்கையில் யானைகள் வைத்தியசாலை..! தாய்லாந்து நடவடிக்கை..!samugammedia

இலங்கையில் சகல வசதிகளுடன் கூடிய யானை வைத்தியசாலை நிர்மாணம் தொடர்பில் தாய்லாந்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

இலங்கையில் வாழும் காட்டு யானைகள் மற்றும் ஏனைய யானைகளுக்கு போதிய வசதிகள் இல்லாததே இதற்குக் காரணம்.

யானைகளுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் இயந்திரங்கள் மற்றும் பல்வேறு மருத்துவ வசதிகளுடன் கூடிய யானை வைத்தியசாலையை நிர்மாணிக்க முயற்சித்து வருவதாக இலங்கைக்கான தாய்லாந்து தூதர் போஜ் ஹர்ன்போல் தெரிவித்துள்ளார்.

யானைகளுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும், யானைகளுக்கு வைத்தியசாலையை நிர்மாணிக்க தேவையான ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக தாய்லாந்தில் இருந்து சிறப்புக் குழுவொன்று எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

மேலும், முத்துராஜா யானைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் தாய்லாந்துக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நாட்டில் உரிய சிகிச்சை பெற்றிருந்தால் முத்துராஜாவை இலங்கையிலேயே வைத்திருந்திருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply