ஈரப்பெரியகுளம் தீ பரவல் சம்பவத்தை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத் சந்திர இன்றையதினம் (22) அறிவுறுத்தல் ஒன்றினை வழங்கியுள்ளார்.
தற்போது நிலவும் அதிக வெப்பம் மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக பொதுமக்கள் திறந்த வெளிகளில் தீயிடும் சந்தர்ப்பங்களில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
வவுனியா – ஈரப்பெரியகுளம் தும்புத் தொழிற்சாலையில் நேற்றையதினம் (21) திடீர் தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலையின் ஒரு பகுதி தீயில் எரிந்து நாசமாகியிருந்தது இதனையடுத்தே இவ் அறிவுறுத்தலினை வழங்கியிருந்தார்.





