115 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட புத்தர் சிலை தீயில் சேதம்

சீனாவின் கான்சு (Gansu)   மாகாணத்தில் உள்ள  ஷான்டன் (Shandan)  பௌத்த விகாரையில்  நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 115 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட புத்தர் சிலை சேதம் அடைந்துள்ளது.

கி.பி. 425ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்த சிலை ஒன்றை பார்த்து இப்புத்தர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் , சிலையின் ஒரு பகுதி மட்டுமே தீயில் சேதம் அடைந்துள்ளதாகவும், விகாரையின்  கலாச்சார நினைவுச்சின்னங்கள் சேதமடையாமல் இருப்பதாகவும் உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இத்தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும்  இல்லை என்றும், விபத்துக்காண காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply