கிளிநொச்சியில் மிருக வதை சட்டத்தின் கீழ் மூவர் கைது!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகேந்திரபுரம் பகுதியில்  20 கால்நடைகளைப் பார ஊர்தி ஒன்றில் கொண்டு சென்ற மூவரைப்  பொலிஸார் இன்று  மிருக வதைச்  சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அத்துடன் குறித்த கால்நடைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

உரிய கால் நடை வைத்தியரின் அனுமதி பத்திரம் இன்மை, கால்நடைகளுக்கான உணவு மற்றும் சுகாதாரவசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்படாமை,உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கைளைப்  பொலிஸார் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply