மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு – யாழில் சம்பவம்!

உடல்நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இமையாணன் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வீட்டில் படுக்கையிலேயே வாயில் இரத்தம் வெளியேறிய நிலையில் காணப்பட்டதை அடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த குறித்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்று (10) காலை உயிரிழந்துள்ளார்.

Leave a Reply