ஆளுநர் சார்ள்ஸைச் சந்தித்த அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்புப் படை

வடமாகாணத்தின் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை இன்று அவுஸ்திரேலியப் எல்லைப்பாதுகாப்பு படையின் முதனிலை செயலாளர் பிராண்ட் இசண்ட மற்றும் அவர்களின் குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பானது  வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றதோடு இதில்  இலங்கை சுங்கத்திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இச்சந்திப்பில்  எல்லைப்பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத பயணங்கள், கடல் எல்லைகளில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து பேசப்பட்டன.

அத்துடன் இலங்கை சுங்கத்  திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படை பயிற்சிகளை வழங்கவுள்ளதாகவும் புதிய தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவுஸ்திரேலியப் படையினர்   தெரிவித்துள்ளார்.

இதன்போது வடமாகாணத்திலிருந்து பாலாலி விமான நிலையம் ஊடாக சென்னைக்கு நேரடியாக பிரயாணம் நடைபெறுவதாலும் இந்தியா இலங்கை கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட இருப்பதனாலும் சுங்கத்திணைக்களங்களின் செயற்பாடுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

 

Leave a Reply