கிளிநொச்சி ஸ்கந்தபுரம் இலக்கம் 02 அ.தா.க பாடசலைக்கு ஜப்பினிய மற்றும் இலங்கை நடகபுறவின் அடையாளமாக ஜப்பானிய மக்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட புதிய கட்டிடத்தொகுதி இன்று கையளிக்கப்பட்டது.
17.6 மில்லியன் செலவின் புதிதாக அமைக்கப்பட்ட குறித்த கட்டடம் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஜப்பன் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மிசுசி கிடாக்கி அதிதியாக கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து கையளித்தார்.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன், மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக் கல்வி பணிப்பாளர், பாடசாலை சமூகம் என பலரும் கலந்துகொண்டனர்.