திருகோணமலையில் பாம்புக் கடிக்கு இலக்கான சிறுமி – வைத்தியசாலையில் அனுமதி! samugammedia

கோமரங்கடவல -கல்யாணபுர பகுதியைச் சேர்ந்த  இரண்டரை வயது சிறுமி பாம்பு கடிக்கு இலக்கான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று (13) காலை இடம் பெற்றுள்ளது.

வீட்டு வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது குறித்த சிறுவன் கதறியதை அடுத்து அங்கு சென்று பார்த்தபோது சிறுவனுக்கு அருகில் பாம்பு நிற்பதை அவதானித்ததாகவும் இதனையடுத்து மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

இவ்வாறு பாம்பு கடிக்கு உள்ளான சிறுவன் அதை பகுதியைச் சேர்ந்த நெதின தேனாஸ் எனவும் தெரியவருகிறது.

வெயிலுடன் கூடிய மழை பெய்தமையினால் இவ்வாறான சந்தர்ப்பங்கள் இடம்பெற்று வருவதாகவும் சிறார்களை பற்றை காடுகளுக்கு அருகில் விளையாடுவதற்கு அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் திருகோணமலை பொது வைத்தியசாலை சிறுவர் பிரிவின் பொறுப்பதிகாரி பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply