யாழ் கோப்பாய் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் 6 சந்தேக நபர்கள் கைது!

யாழ் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டரங்கு வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றில் அடி காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் 2 பெண்கள் 4 ஆண்கள் சண்டிலிப்பாய் பிரதேசத்தில் வைத்து மாவட்ட குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மேனன் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் கோப்பாய் பிரதேசத்தை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவரை பாடசாலைக்கு ஏற்றி இறக்கி வரும் குறித்த நிலையில் நபர் சிறுமியுடன் தகாத முறையில் நடந்ததாக சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த தகவலை தாயார் சித்தங்கேணியில் உள்ள சிறுமியின் மாமனுக்கு தெரிவித்திருந்த நிலையில் அவர் கோப்பாய் வந்து குறித்த நபரை சிந்தங்கேணி அழைத்து சென்று அங்கு வைத்து விசாரித்த போது குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த நபரை கோப்பாய் கொண்டுவந்து அவரது இலத்தில் விட்டுள்ளனர்.

அவ்வாறு வீட்டில் விடப்பட்ட நிலையில் குறித்த நபர் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

The post யாழ் கோப்பாய் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் 6 சந்தேக நபர்கள் கைது! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply