மோட்டார் சைக்கிள் சறுக்கியதில் இளம் பெண் பலி! தமிழர் பகுதியில் சோகம் samugammedia

 மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பி.எஸ்.வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

தனது சகோதரருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது கல் ஒன்றில் மோட்டார் சைக்கிள் சறுக்கியதில் பின் பக்கத்திலிருந்த பெண் கீழே விழுந்துள்ளார்.

தலைப் பகுதியில் கடும் பாதிப்படைந்த அவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது மரணமடைந்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்தவர் மீராவோடை உதுமான் வித்தியாலயத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரியும் 28 வயதுடைய ஜே. ராஷிதா பர்வின் என்பவராவார்.

விபத்தில் மரணமடைந்த பெண்ணின் உடல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply