கச்சதீவை மீட்கப்போவதாக இந்திய பிரதமர் மோடி கூறுவது அரசியல் நாடகம்…!samugammedia

கச்சதீவை மீட்கப்போவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறுவது அரசியல் நாடகம் என வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் க. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று(16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரித்தானிய அரசாங்கம் இலங்கையிலிருந்து செல்லும் போது கச்சத்தீவு யாருக்கு உரிமையானது என்று குறிப்பிடாத காரணத்தால் இரு நாடுகளுமே உரிமை கொண்டாடுகின்ற நிலை காணப்படுவதாகவும் இலங்கையின் சர்வதேச எல்லைக்கோட்டில் இருந்து சிறிய கடல் பகுதியை எடுத்து கொண்டு கச்சத்தீவை இந்தியா விட்டு விலக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

மாறாக, கச்சத்தீவை இந்தியா எமக்கு தரவில்லை என்றும் தானாக விலக்கியதாகவும் தெரிவித்த அவர், இந்திய பிரதமர் மோடி அவர்கள் கச்சதீவை மீட்கப்போவதாக கூறுவது அரசியல் நாடகம் என்றும், 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட இணக்கப்பாட்டை ஓரம்கட்டுவதற்காக கச்சத்தீவு பிரச்சனை பேச்சு கொண்டு வரப்பட்டாலும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply