மீன் குஞ்சுகள் இறந்ததாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது…!விளக்கமளித்த அதிகாரி..!samugammedia

தற்பொழுது ஏற்பட்டுள்ள வரட்சியின் காரணமாக எந்த ஒரு குளத்திலும் மீன்கள் இறக்கவில்லை என நீர் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் உத்தியோகத்தர் சங்கீதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள நீரியல் வள திணைக்களத்தில்இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்பொழுது ஏற்பட்டுள்ள வரட்சியின் காரணமாக எந்த ஒரு குளத்திலும் மீன்கள் இறக்கவில்லை. அண்மையில் மல்லாவி குளத்தில் விடப்பட்ட மீன் குஞ்சுகள் இறந்ததாக பேசப்பட்ட செய்தி முற்றிலும் பொய்யாது.

மல்லாவி குளத்தில் மீன் குஞ்சுகள் இதுவரையில் விடப்படவில்லை. அக்குளத்தில் உள்ள மீன் இனங்கள் கால்வாயின் ஊடாக வெளியேறி இறந்துள்ளது. எந்த ஒரு குளத்திலும் நன்னீர் மீன்களுக்கான நோய்கள் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,  நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் மீனவ சங்கத்தின் ஊடாக பதிவு செய்திருத்தல் வேண்டும். அப்படி இதுவரை காலமும் பதிவு செய்யாதவர்கள் உடனடியாக நன்னீர் மீனவர் சங்கத்தில் தமது பதிவினை மேற்கொள்ள வேண்டும்.

அத்தோடு தமது பகுதிகளில் உள்ள குளங்களில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் நடைபெறுவதினை கண்டால் உடனடியாக  நீரியல் திணைக்களத்தினருக்கு தெரிவிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply