
தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தில் முஸ்லிம் கிராமம் ஒன்றில் மையவாடியில் அடக்கம் செய்யப்படும் ஜனாஸாக்கள் சிலவற்றின் மண்டையோடு, எலும்புகள் முதலான உடற்பாகங்கள் மர்மமான முறையில் தோண்டி எடுக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகின்ற சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தென்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்தவிற்கு அறிவித்துள்ளார்.