மது அருந்தி விட்டு பாடசாலைக்குச் சென்ற 14 வயது மாணவி! samugammedia

மது அருந்தி விட்டு பாடசலைக்குச் சென்ற 14 வயதுடைய மாணவி ஒருவரை கெகிராவ பிரதேச பொலிஸார் செவ்வாய்க்கிழமை (17) வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த மாணவி பாடசாலை அருகில் நின்ற போது அவரது நடவடிக்கை மீது  சந்தேகப்பட்ட பொலிஸார் மாணவியை விசாரணை நடத்தியபோது அவர்  மது  அருந்தி உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர். 

அதனையடுத்து பொலிஸார் குறித்த  மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று, பாடசாலை அதிபரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக தொடர்புகொள்ள முயற்சி செய்த போது பாடசாலையில் இருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த மாணவியிடம் பொலிஸார் விசாரனை நடத்திய போது  மாணவியின் தாத்தா தான் தன்னை மது பழக்கத்திற்கு அடிமையாக்கியதாக தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து கெகிராவ பொலிஸார் மேலதிக நடவடிக்​கை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

Leave a Reply