ஹோமாகம கைத்தொழில் வலயத்தில் உள்ள இரசாயன தொழிற்சாலையொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த தீப்பரவலை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீயை கட்டுப்படுத்தும் பணியில் கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.