குருந்தூர்மலை பொங்கலில் பங்கெடுக்குமாறு அழைப்பு! samugammedia

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது நாளையதினம் இடம்பெறவுள்ள குருந்தூர்மலை பொங்கல் வழிபாடு குறித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அவ் அறிக்கையில்,

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் நாளை வெள்ளிக்கிழமை, காலை  பொங்கல் வழிபாடு இடம்பெறவுள்ளதாக  ஆலய நிர்வாகத்தினர் அறிவித்திருந்தனர். 

இந்த விடயமானது நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டநிலையில், தொல்லியல் திணைக்களம் சைவவழிபாடுகளை மேற்கொள்வதற்கு  தடையில்லை எனத் தெரிவித்திருந்தது.

பொங்கல் வழிபாட்டை தடுப்பதற்கு இறுதிவரை பலரால் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், பொங்கல் வழிப்பாட்டை தடுப்பதற்கு  அதிகாரம் இல்லை என இன்றும் முல்லைத்தீவு  நீதிமன்று கட்டளை வழங்கியுள்ளது.  அத்துடன் பொலிசாரின் தடையுத்தரவு கோரிக்கையை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று  நிராகரித்துள்ளது. 

எனவே பௌத்த பேரினவாதத்தின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில் எமக்கான உரிமைகளை மீட்டெடுக்கவும் எமது மரபுகளை பேணிக்காக்கவும்   மக்கள் அனைவரும் குருந்தூர்மலைக்கு நாளை வருகை தந்து  பொங்கல் விழாவையும் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் இங்கே எமது வரலாறுகளை மறைக்கும்,  மழுங்கடிக்கும் செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *