யாழில்,வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைது! samugammedia

பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக கீரிமலை, கல்வியங்காடு பரமேஸ்வரா சந்தி, பாற்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் பெற்ரோல் குண்டுகளை வீசி வீடுகளை சேதப்படுத்திய பிரதான சந்தேக நபர் உட்பட 9 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருப்பினும், கைது செய்யப்பட்டு நபர்களிடமிருந்து மூன்று மோட்டார் சைக்கில்கள்,  சம்பவத்துக்கு பயன்படுத்திய இரண்டு வாழ்கள், ஒரு கை கோடாலி, ஒரு இரும்பு கம்பி, மடத்தல், அத்தோடு சம்பவத்துக்கு பயன்படுத்திய பெண்களின் ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளன, 

மேலும் சந்தேக நபர்களிடம் விசாரணைகளை செய்தபோது கல்வியங்காடு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் வெளிநாட்டில் இருப்பதாகவும் அவர் அனுப்பிய பணத்தின் மூலமே சம்பவத்தை செய்ததாகவும் கூறியுள்ளனர்.


குறிப்பாக இவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையான பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை நாளை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.Leave a Reply