லொறியுடன் மற்றுமொரு லொறி மோதி விபத்து – ஒருவர் காயம் ! samugammedia

திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி மஹதிவுல்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் லொறியின் சாரதி காயமடைந்த நிலையில்  மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

இவ்விபத்து இன்று (20)அதிகாலை இடம் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறி வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதாகவும் தெரிய வருகின்றது.

இதன் போது யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த லொறியின் சாரதியான யாழ்ப்பாணம் எஸ். திலீபன் (38) என்பவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது 

குறித்த விபத்து தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் 

Leave a Reply