யாழில் இளைஞர் பௌத்த சங்கத்தின் அங்குரார்ப்பணம்!

யாழ் இளைஞர் பௌத்த சங்கத்தின் அங்குரார்பண நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம் பெற்றது.
யாழ்ப்பாணம் சிவில் சமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது கொழும்பு பௌத்த இளைஞர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொருளாதார நிவாரண உதவி திட்டத்தினூடாக 250 கர்ப்பிணி பெண்களுக்கு இதன்போது உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில்கூரஹல ரஜமஹாவிகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய வத்துறகும்புற தம்மரத்தன தேரர், பலாங்கொட இம்புல்பே விஜித வன்ச தேரர், மற்றும் யாழ்ப்பாணம் நாகவிகாரையின் விகாராதிபதி மீஹஜந்துர விமலதர்ம சுவாமி அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். அத்தோடு கொழும்பு இளைஞர் பௌத்த சங்கத்தின் தலைவர் மகேந்திர ஜயசேகர மற்றும் அவர்களது குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply