இரத்மலானை துப்பாக்கிச் சூடு…! தொடரும் விசாரணை..!samugammedia

இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் நேற்றிரவு(21) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு(21)  9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரத்மலானையை சேர்ந்த 40 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இதுவரை வௌியாகவில்லை.

சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *