உணவருந்திவிட்டு உறங்கிய இளைஞர் உயிரிழப்பு! யாழில் அதிர்ச்சி சம்பவம் samugammedia

யாழில் நேற்றிரவு(21) உணவருந்திவிட்டு உறங்கிய இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் கொட்டடிப்  பகுதியைச் சேர்ந்த மிதுன்ராஜ் என்ற  31 வயதான இளைஞரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று இரவுணவு அருந்திவிட்டு  படுக்கைக்கு சென்ற சில நிமிடங்களிலேயே அவர்  கட்டிலில் அசைவின்றி காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அவரது வீட்டார் உடனடியாக அவரை வைத்திய சாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரைப் பரிசோதித்த  வைத்தியர்கள் ”அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் ”எனத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவரது சடலம் உடற்கூற்றுப்  பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply