சிறைக்கைதிகளிடையே பரவும் காய்ச்சல், தோல் தொற்றுநோய் காரணமாக காலி சிறைச்சாலையில் இருந்து கைதிகளை வெளியே அழைத்துச்செல்ல இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போதைய நிலைமையில், சிறைக்கைதிகளை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் செயற்பாடுகள் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் சிறைச்சாலை ஊடகப்பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.