அண்ணபூரணித் திருவிழா!

மன்னார் மாவட்டத்திலுள்ள  நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தின்   அன்னபூரணித்  திருவிழாவானது  நேற்றைய தினம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இதன் போது ஆலயத்தைச் சுற்றி பக்தர்களால் பொங்கல் பொங்கி  அம்பிகைக்கான நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றப்பட்டன.

இத்  திருவிழாவின் சிறப்பம்சமாக திருச்சி தேவா எனப்படும் நானாட்டான் பிரதேசத்தின் சங்கீத வித்துவானும், இசைப் பேராசிரியருமான  மாசிலாமணி தேவபாலன் அவர்களின் இசைக் கச்சேரி இடம்பெற்றது.

இத்திருவிழாவைக்கான ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply