யாழில். முதலுதவிப் பயிற்சிப் பாசறை

யாழில் ‘சிறகுகள் ‘ அமையத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளையோர்களுக்கான முதலுதவிப் பயிற்சிப் பாசறையொன்று எதிர்வரும் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

இலங்கை சென்.ஜோன் அம்பியுலன்ஸ் சேவையினரை வளவாளர்களாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள இப்பயிற்சிபாசறையானது யாழ்ப்பாணம் முதலாம் குறுகுத்தெருவில் அமைந்துள்ள புனித ஜோன் அம்பியுலன்ஸ் சேவை பணிமனையில் காலை 8.30 மணி முதல் 2.00 மணி வரை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்பயிற்சியில் கலந்துகொள்ளபவர்களுக்கு சான்றிதழ் கட்டணமாக பாடசாலை மாணவர்களுக்கு 300.00 ரூபாயும்  எனையவர்களுக்கு 1250.00 ரூபாயும் அறவிடப்படும் எனவும், மேலதிக விபரங்களை பெற 0756322173 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்ளுமாறும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *