இலங்கை பெண் படைத்த சாதனை..! வரலாற்றில் முதல் முறையாக கிடைத்துள்ள கிரீடம்! samugammedia

கானாவில் நடைபெற்ற நான்காவது Miss Teen Tourism Universe 2023 போட்டியில் இலங்கை பெண் முதல் முறையாக கிரீடம் வென்றுள்ளார்.

இலங்கையை சேர்ந்த நெலுனி சௌந்தர்யா, 2023 ஆம் ஆண்டிற்கான Miss Teen Tourism Universe கிரீடத்தை வென்றுள்ளார்.

இவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

20 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த போட்டி ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை கானாவின் அக்ரா நகரில் நடைபெற்றது.

நடுவர் மன்றத்தை மிகவும் வியப்பில் ஆழ்த்திய நெலுனி, இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பட்டத்தை வென்றுள்ளார்.

மேலும் இலங்கையின் சுற்றுலா துறைக்கு முக்கிய பங்களிப்பு வழங்க எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *