ஆலய திருவிழாவில் சோகம்…! இருவர் பரிதாபமாக உயிரிழப்பு…!samugammedia

பதுளை நமுனுகுலை பூட்டாவத்த பகுதியில் ஆலய இரதம் ஒன்று அதிவேக மின்சாரத்தை கடத்தும் வடத்தில் மோதுண்டதில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துடன் 3 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

பதுளை நமுனுகுலை பூட்டாவத்தையில் இருந்து நேற்றிரவு மாதலாவத்த பகுதிக்கு சென்ற இரதம் மீண்டும் ஆலயத்திற்கு திரும்பும் வழியிலே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் 27 மற்றும் 37 வயது மதிக்கத்தக்கவர்களே உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply