அம்பாறை மாவட்டத்தின் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஹாரை ஒன்றில் வைத்து 3 இளம் பிக்குகள்பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு நேற்றையதினம் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸார் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணிகளின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டது.
அத்துடன் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை மறுவிசாரணைக்காக குறித்த வழக்கினை கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.
மேலும் குறித்த பாலியல் துஸ்பிரயோக வழக்கில் பிரதான சந்தேக நபராக குறிப்பிடப்படும் கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி சார்பில் முன்னாள் அமைச்சரும் சட்டத்தரணியுமான ஸ்ரீயானி விஜேவிக்கிரம தலைமையிலான சட்டத்தரணிகள் குழு ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.