யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் 14 வயதான சிறுவன் எரிந்து உயிரிழந்தார்.
மற்றொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொற்றாவத்தையில் இன்று (24) மதியம் இந்த விபத்து நேர்ந்தது.
வளைவொன்றில் டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகின.
விபத்தை தொடர்ந்து மோட்டார் சைக்கிள் தீப்பற்றியது. மோட்டார் சைக்கிளில் பயணித்த 14 வயதான சிறுவன் படுகாயமடைந்த நிலையில், தீயில் கருகி உயிரிழந்தார்.
22 வயதான முள்ளிவளையை சேர்ந்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.