முன்னாள் எதிர்கட்சி தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் பிறந்த தினம்…! யாழில் கேக் வெட்டி கொண்டாட்டம்!samugammedia

முன்னாள் எதிர்கட்சி தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 96ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலில் அமைந்துள்ள அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் திருவுருவச்சிலை வளாகத்தில் பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பண்ணாகம் அண்ணா கலைமன்றத்தினரால் விசேட நிகழ்வுகள் இன்று காலை 7மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்பொழுது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வட்டுக்கோட்டை தொகுதி தமிழரசுக் கட்சி தலைவருமான ஈஸ்வரபாதம் சரவணபவனால், 96 ஆவது அகவையை நினைவுறுத்தும் முகமாக கேக்வெட்டி , அமிர்தலிங்கத்தின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலையும் , மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பண்ணாகம் அண்ணா கலைமன்றத்தினர், பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர்,  இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி மகளிர் அணிசெயற்பாட்டாளர் பரமானந்தவள்ளி , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply