சர்வதேச கல்வி மையமாக இலங்கையை மாற்றுவதற்கான முன்மொழிவுகளை அவுஸ்ரேலியா முன்வைத்துள்ளது.
இலங்கையை ஒரு முக்கிய சர்வதேச கல்வி மையமாக நிலைநிறுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் புதிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையை சர்வதேச கல்வி நிலையமாக மாற்றுவதன் மூலம் இந்தியா, மாலைதீவு, இந்தோனேசியா, நேபாளம், பங்களாதேஷ் உள்ளிட்ட பல அயல் நாடுகளிலிருந்து பெருமளவிலான வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க முடியும் என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இருதரப்பு உறவுகள் தொடர்பான விசேட மாநாடு நேற்றுமுன்தினம் 24 ஆம் திகதி வர்த்தக சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.