இலங்கை கிரிக்கெற் அணிக்குள் ஊடுவிய கொரோனா..! இருவருக்கு தொற்று…!samugammedia

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆசியக் கிண்ணத் தொடர் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடருக்கான இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த குசல் பெரேரா மற்றும் அவிஸ்க பெர்னாண்டோ ஆகிய இரண்டு வீரர்களுக்கே கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஏனைய வீரர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர். கொரோனாத் தொற்று விடயத்தில் சர்வதேச கிரிக்கெட் சபை தற்போது தளர்வான விதிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றபடியினால் இந்தத் தொற்று நிலைமை தொடரில் பெரிதான தாக்கத்தை 5 ஏற்படுத்தும் என்று கருதப்படவில்லை. ஆனால், இலங்கை அணியின் பெறுபேற்றில் இது பெரும் சவாலை வழங்கலாம் என்று கருதப்படுகின்றது

Leave a Reply