சுகாதாரத்துறை எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதை வலியுறுத்தி யாழில் கையெழுத்துப் போராட்டம் samugammedia

யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கெண்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்காவின் பங்குபற்றலுடன் நாட்டில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு மற்றும் சுகாதாரத்துறை எதிர்கொள்ளும் பிரச்சனைக்கு தீர்வு வழங்குவதை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

இன்று(27)காலை 11.00 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் பொதுமக்களிடம் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டது.

Leave a Reply