சிங்களவர் வந்தேறு குடிகள் என்பதை நிரூபிக்க மகாவம்சமே போதும் – சபா குகதாஸ் தெரிவிப்பு! samugammedia

ஈழத் தமிழர்களைப் பார்த்து வந்தேறு குடிகள் என பித்தலாட்டு உருட்டுகளை முன் வைக்கும் சிங்கள இனவாதிகள் உங்கள் மகாவம்ச நூலை நன்றாக வாசித்துப் பாருங்கள் அதில் பல உருட்டுகள் இருந்தாலும் ஆறாம் அத்தியாயம் சொல்கிறது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

விஐயனுடைய வருகை தொடர்பாக விஐயன் வரும் போது இயக்கர் நாகர் எனும் பூர்வீக குடிகள் வாழ்ந்து கொண்டிருந்ததாகவும் மகாவம்சம் கூறும் குவேனி கல்வெட்டுகளில் கவினி என்ற பெயரில் அழைக்கப்பட்ட பேரழகு வாய்ந்த தமிழ்ப் பெண்ணை திருமணம் முடித்து ஈழத்தில் குடியேறியதாக கூறுகின்றது எனவே இந்த உண்மையை மறைத்து தமிழர்களைப் பார்த்து வந்தேறு குடிகள் என அழைத்து சிங்கள மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்த சிங்கள இனவாதிகள் எண்ணியுள்ளனர்.

2009 முன் பெட்டிப் பாம்பாக இருந்த இனவாதிகள் சிலர் பூனையில்லா வீட்டில் சுண்டெலிக்கு கொண்டாட்டம் என்பது போல் கூத்தடிக்கின்றனர் விஐயன் வருகைக்கு முன் தமிழர்கள் தான் பூர்வீக குடிகள் என்பதற்கு பலாங்கொடை , இரணைமடு , பொம்பரிப்பு ,  செங்கடகல ,பொலநறுவை,அனுராதபுரம், ஆனைக்கோட்டை போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்கள் தமிழர்கள் தொடர்பான போதிய சான்றுகளை தமிழர்களை பூர்வீக குடிகள் என உறுதி செய்கின்றன.

மேலும், விஐயன் வருவதற்கு முன்னர் சைவமதமும் தமிழ் மன்னர்களும் தான் இருந்தனர் என்பதை மகாவம்சமே மிகப் பெரிய ஆதாரம் ஆனால் 1948 ஆண்டின் பின்னர்  சிங்கள பேரினவாதம் தமிழர்களின் தொன்மைகளை மாற்றி பௌத்த சிங்கள மயப்படுத்தும் மோசமான தமிழ் இனப்படுகொலையை அரங்கேற்றி வருகிறது  அதன் தொடர்ச்சியே தமிழர்களை வந்தேறு குடிகள் என கூறும் பித்தலாட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *