காத்தாடி பறக்கவிட்டுக் கொண்டிருந்த சிறுவனுக்கு நடந்த விபரீதம்! samugammedia

புத்தளம் – மாம்புரி  தலுவா பகுதியில் காத்தாடி பறக்கவிட்டுக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (27) மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார கம்பியில் சிக்கிய காத்தாடியை எடுக்க முற்பட்ட போது மின்சாரம் தாக்கியுள்ளது. 

அதனையடுத்து, குறித்த சிறுவனை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மாம்புரி தலுவா பிரதேசத்தில் வசித்து வந்த நஹந்ததிலகே அதீச விதுசர பெர்னாண்டோ என்ற 13 வயதுடைய சிறுவனே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் உடல் நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply