மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் ஆன்மீக பாதயாத்திரை ஆரம்பம்! samugammedia

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு எட்டு நாட்களைக் கொண்ட ஆன்மீக பாதயாத்திரை இன்று செவ்வாய்க்கிழமை மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகியது.

மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களின் எல்லையாக இருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்கிழமை மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆன்மீக பாதயாத்திரை ஆரம்பமாகியது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் ஆரம்பமாகிய ஆன்மீக பாதயாத்திரையானது இன்று செவ்வாய்கிழமை மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி எதிர்வரும் 05ம் திகதி செவ்வாய்கிழமை பிற்பகல் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தை சென்றடையவுள்ளது.

குறித்த யாத்திரையில் நந்திக்கொடி ஏந்தியவாறு அரோகரா கோசத்துடன் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இப்பாதயாத்திரையின் போது 29ம் திகதி மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி மண்டூர் விஷ்ணு ஆலயம், மண்டூர் மாணிக்கம் சாமியார் தண்ணீர்ப்பந்தல், துறையடி மாரியம்மன் ஆலயம், குறுமன்வெளி விநாயகர் ஆலயம், குருமன்வெளி நாகதம்பிரான் ஆலயம், எருவில் அம்மன் ஆலயம், எருவில் ஐயனார் ஆலயம், பட்டிருப்பு பிள்ளையார் ஆலயம், களுவாஞ்சிக்குடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயம், களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம், 30ம் திகதி தேத்தாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார்; ஆலயம், மாங்காடு பிள்ளையார் ஆலயம், செட்டிபாளையம் முருகன் ஆலயம், செட்டிபாளையம் பிள்ளையார் ஆலயம்;, குருக்கள்மடம் செல்லக் கதிர்காமர் ஆலயம், குருக்கள்மடம் ஐயனார் ஆலயம், கிரான்குளம் கணபதிப் பிள்ளையார்,  கிரான்குளம் மகா விஷ்ணு ஆலயம், புதுக்குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயம் தாளங்குடா விநாயகர் ஆலயம், தாளங்குடா சரீரம் விஷ்ணு ஆலயம், ஆரையம்பதி சிவன் ஆலயம், ஆரையம்பதி திருநீலகண்ட பிள்ளையார் ஆலயம், பத்திரகாளியம்மன் ஆலயம், கண்ணகையம்மன் ஆலயம், கந்தசுவாமி ஆலயத்தினை சென்றடையும்.


31ம் திகதி ஆரையம்பதி பரமநயினார், மஞ்சந்தொடுவாய் வீரபத்திரர் ஆலயம், சித்தி விநாயகர் ஆலயம், நாவற்குடா மாரியம்மன் ஆலயம், நாவற்குடா விஸ்ணு ஆலயம், கல்லடி பேச்சியம்மன் பிள்ளையார் ஆலயம், கல்லடி முருகன் ஆலயம், கல்லடி பிள்ளையார் ஆலயம், தாமரைக்கேணி மாரியம்மன் ஆலயம், கீரிமடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், மாமாங்கம் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை சென்றடையும்

 01ம் திகதி மாமாங்கம் மாரியம்மன் ஆலயம், பெரியஊரணி பத்திரகாளியம்மன் ஆலயம், கொத்துக்குளம் மாரியம்மன் ஆலயம், பிள்ளையாரடி விநாயகர் ஆலயம், மயிலம்பாவெளி ஸ்ரீ முருகன் ஆலயம், மயிலம்பாவெளி சித்தி விநாயகர்; ஆலயம், ஆறுமுகத்தான் குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயம், ஏறாவூர் பிள்ளையார் ஆலயம், ஏறாவூர் கருமாரியம்மன் ஆலயம், வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயம், ரமேஷ்புரம் சித்திரவேலாயுதர் ஆலயம், சிவதொண்டர் நிலையம், கொம்மாதுறை தேவி கோயில், கொம்மாதுறை பிள்ளையார் ஆலயம், வந்தாறுமூலை விஸ்ணு ஆலயத்தை சென்றடையும். 

02ம் திகதி வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலயம், மருங்கையடிப் பிள்ளையார் ஆலயம், சித்தாண்டி சந்திப் பிள்ளையார் ஆலயம், சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலயம், முறக்கொட்டான்சேனை மகமாரியம்மன் ஆலயம், முறக்கொட்டான்சேனை விஷ்ணு ஆலயம், சந்திவெளி புதுப்பிள்ளையார் ஆலயம், கோரகல்லிமடு சித்தி விநாயகர் ஆலயம், கிரான் சித்தி விநாயகர் ஆலயம், கிரான் அம்மன் ஆலயம், கும்புறுமூலை முனீஸ்வரர் ஆலயம், கறுவாக்கேணி முத்துமாரியம்மன் ஆலயம், பெற்றோல் நிலைய பிள்ளையார் ஆலயம், வைத்தியசாலை சித்தி விநாயகர் ஆலயம், வாழைச்சேனை புதுக்குடியிருப்பு பத்திரகாளியம்மன் ஆலயத்தை சென்றடையும்.

03ம் திகதி வாழைச்சேனை பேச்சியம்மன் ஆலயம், வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலயம், மயிலங்கரச்சை மாரியம்மன் ஆலயம், வட்டவான் சித்தி விநாயகர் ஆலயம், காயான்கேணி விஸ்ணு ஆலயம், மாங்கேணி செல்வ விநாயகர் ஆலயத்தை சென்றடையும்.

04ம் திகதி மாவடிஓடை விஷ்ணு ஆலயம், பனிச்சங்கேணி முருகன் ஆலயம்,  வாகரை வைத்தியசாலை பிள்ளையார் ஆலயம், வாகரை செல்வ விநாயகர் ஆலயம், வாகரை செல்வ விநாயகர் ஆலயம், வாகரை சிவமுத்துமாரியம்மன் ஆலயத்தை சென்றடையும்.

05ம் திகதி புளியங்கண்டலடி மாரியம்மன் ஆலயம், கண்டலடி பத்திரகாளியம்மன் ஆலயம், அம்பந்தனாவெளி பிள்ளையார் ஆலயம், பால்சேனை பிள்ளையார் ஆலயம், பால்சேனை நாகதம்பிரான் ஆலயம், புச்சாக்கேணி செந்தூர் முருகன் ஆலயம், கதிரவெளி வைத்தியசாலை பிள்ளையார் ஆலயம், கதிரவெளி வீரகத்திப் பிள்ளையார் ஆலயம், கதிரவெளி பத்திரகாளி அம்மன் ஆலயத்தை சென்றடைந்து பிற்பகல் வேளை வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தை சென்றடையும் என்றும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இப்பாதயாத்திரையில் பக்த அடியார்கள் கலந்து கொள்ளுமாறும், கலந்து கொள்பவர்களுக்கு உணவு வசதிகள் வழங்கப்படும் என்றும், கலாசார உடையும் கலந்து கொள்ளுமாறும் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *