ஆரம்பமானது ”யாழ் முயற்சியாளர் – 2023” கண்காட்சி

யாழில் ”யாழ் முயற்சியாளர் – 2023”என்ற விற்பனைக் கண்காட்சி இன்று ஆரம்பமாகியுள்ளது. யாழ் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள இக்கண்காட்சியானது இன்றைய தினமும்,  நாளைய தினமும் யாழ்ப்பாணம், நல்லூர்,முத்திரைச்சந்தி அருகாமையில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்கா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கும் அவற்றிற்கான சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் விதமாகவே இக்கண்காட்சி  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில்  யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற  ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.

அத்துடன் ’மேலதிக அரசாங்க  அதிபர்  (காணி), நல்லூர் பிரதேச செயலாளர் எழிலரசி அன்ரன் யோகநாயகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் துறைத் தலைவர் கமலகுமாரி கருணாநிதி, தொழிற்துறை திணைக்களத்தின் வடக்கு மாகாண பணிப்பாளர் வனஜா செல்வரட்ணம் உள்ளிட்ட பலரும் இக்கண்காட்சியில் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply