போதைப்பொருள் சோதனை நடவடிக்கை…! பொலிஸாரினால் துப்பாக்கிச் சூடு…! நடந்தது என்ன samugammedia

பொரளை, வனத்தமுல்லை பகுதியில்  முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சோதனை நடவடிக்கையின் போது பொலிஸாரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் இந்த துப்பாக்கி சூட்டுக்கு மத்தியில் சந்தேக நபர்கள் வாகனம் ஒன்றில் தப்பிச் சென்றுள்ளனர்.

எவ்வாறெனினும் குறித்த வாகனம் பேலியகொட பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையினை கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply