குறிகாட்டுவானில் வாகனங்கள் பயணிக்க தடை…! வெளியான அறிவிப்பு…! samugammedia

குறிகாட்டுவான் இறங்குதுறையில் கனரக வாகனங்கள் பயணிப்பது ஒரு வாரத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறிகாட்டுவான் இறங்குதுறையின் கீழ் பகுதிகள் இரும்பால் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், அவை துருப்பிடித்து வலுவிழந்துள்ளதை அடுத்தே கனரக வாகனங்கள் பயணிக்க தற்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் குரூஸ் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
 
இறங்குதுறையின் கீழ்ப்பகுதி வலுவிழந்துள்ள நிலையில்  பாதுகாப்பு  தரப்பால் எமக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அதனால் கனரக வாகனங்கள் செல்லும் போது  சக்கரங்கள் கீழிறங்கும் ஆபத்து காணப்படுகிறது. பொருட்களை இறங்குதுறைக்கு கொண்டு செல்லும் பகுதி வரை வாகனத்தில் கொண்டு சென்று, அப்பால் மனிதவளத்தை பயன்படுத்தி படகில் பொருட்களை ஏற்ற வேண்டும் என்று கேட்டு கொள்கின்றோம்.

அடுத்த வாரம் கப்பல் கட்டுமானம் தொடர்பான விசேட குழு யாழ். வருகிறது. அந்தக்குழுவுவுடன் இணைந்து இறங்குதுறை தொடர்பாக தீர்க்கமான முடிவு எட்டப்படும். அந்தக்குழு நெடுந்தரகை மற்றும்  நயினாதீவுக்கான கடற்பாதை படைக்குச்சேவை தொடர்பாகவும் ஆராயவுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *